வெள்ளி, 27 நவம்பர், 2009

பக்ரித் பண்டிகை.கடையநல்லூர்,வாடி நண்பர்கள்

ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு வருடமும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10 ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் உள்ள புனித காபாவை நோக்கி ஃஅச்சு (Haji) எனப்படும் புனிதப்பயனம் மேற்க்கொள்கின்றனர். இது இவர்க்ளின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும் இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துனிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிளுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிம் அவர்களுக்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த கதையின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

திருநாள் கொண்டாட்டம்

சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அனிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகலிலேயே நடத்தப்படுகின்றன.( வாழ்த்துகள் )

கருத்துகள் இல்லை: