திங்கள், 15 பிப்ரவரி, 2010

PDFPortable Document Format பி.டி.எப்.

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from  http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word from   http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

3. பி.டி.எப். கிராக் (PDFCrack): நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம்.  http://www.ensode.net/pdfcrack.jsf என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.

4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline): எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்ற  http://www.pdftoexcelonline.com/ என்ற முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.

5. பி.டி. பைண்ட் (PD Find): கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த (http://pdfind.com)தளத்தில் தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.

6. பி.டி.எப். வியூ (PDFVue): அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது.  http://www.pdfvue.com/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.

7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter): எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும். செல்ல வேண்டிய தளம்  http://htmlpdfconverter.com/

8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF): எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.mergepdf.net. ஒவ்வொரு பைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.

9.கவுண்ட் ஆன் இட் (Count On It): பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம்.  http://felixcat.com/tools/wordcount/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி கிடைக்கிறது. PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.

10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF): இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும். செல்ல வேண்டிய தள முகவரி  http://www.brothersoft.com/ speedypdf30012.html

M S ஆபீஸ் 2010

வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.


ஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)

ஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.

ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.

ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் கிரா

இது அடிக்கடி நாம் கேட்கும் ஒரு சொல் தொடர். அது என்ன கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது? உங்கள் மீது மோதி நின்னு போச்சா! என்று சிலர் கேலி செய்வார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது என்பது வேறு ஒன்றைக் குறிப்பிட்டாலும், நாம் எதிலாவது மோதி நின்றால், கவலைப்படுவதனைக் காட்டிலும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் கவலைப்படுவோம். இல்லையா

அடிப்படையில் கம்ப்யூட்டர் கிராஷ் என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது உங்கள் சிஸ்டம் புரோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் போவதுதான். இதனால் மற்ற புரோகிராம் அல்லது கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுகளும் முடங்கிப் போவதுதான். குறிப்பாக கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய பகுதி இயங்காமல் முடங்குவது, கம்ப்யூட்டரின் செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடும். எது காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராஷ் என்பது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் கிராஷ் என்பதனை சிலர் சிஸ்டம் கிராஷ் என்றும் கூறுவார்கள்.

இன்டர்நெட் புள்ளி விபரங்கள் 2009

2009ல் இணையம்


நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் அனுப்பப்பட்ட இமெயில்கள் – 90 ட்ரில்லியன். நாளொன்றுக்கு சராசரியாக 24.7 கோடி இமெயில்கள் அனுப்பப்பட்டன. உலக அளவில் 140 கோடி பேர் இமெயில்களைப் பயன்படுத்தினர். இந்த ஆண்டில் புதிதாய் இமெயில் அனுப்பி யவர்கள் 10 கோடி. மொத்த இமெயில்களில் குப்பையாக மொத்தமாக அனுப்பப்பட்டவை 81சதவீதம். ஆண்டின் இறுதியில் இந்த ஸ்பேம் மெயில்கள் 92 சதவீதம் வரை உயர்ந்தன. சென்ற ஆண்டு மட்டும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருந்தது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ஸ்பேம் மெயில்கள் அனுப்பப்பட்டன. டிசம்பர் இறுதியில் மொத்தம் 23.40 கோடி இணையதளங்கள் இருந்தன. இவற்றில் 4.7 கோடி இணையதளங்கள், 2009ல் உருவாக்கப்பட்டவை. மொத்த தளங்களில் .COM என்ற வகை தளங்கள் 8.18 கோடி, .NET என்ற பெயரில் 1.23 கோடி, .ORG என்ற வகையில் 78 லட்சம், .IN போன்ற நாட்டின் துணைப் பெயர்களில் 7,63 கோடி இருந்தன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 18% உயர்ந்திருந்தது. ஆசியா – 73,82,57,230, ஐரோப்பா – 41,80,29,796, அமெரிக்கா 25,29,08,000, கரிபியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் – 17,90,31,479, ஆப்பிரிக்கா – 6,73,71,700, மத்திய கிழக்கு நாடுகள் – 5,74,25,046, ஆஸ்திரேலியா, ஓசியானியா நாடுகள் – 2,09,70,490. பிளாக்குகள் எனப்படும் சிறிய வலை மனைகளின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் 12.6 கோடி. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வலைமனை 84 சதவீதம் கூடுதலாகும். பேஸ்புக் தளத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை 35 கோடி. இவர்களில் 50சதவீதம் பேர் நாள்தோறும் இதனைப் பயன்படுத்தினர். 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்து பவர்களாக இருந்தனர். 2009 டிசம்பரில் பிரவுசர் பயன்பாடு கீழ்க்குறித் தபடி இருந்தது. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் – 62.7சதவீதம், பயர் பாக்ஸ் 24.6 சதவீதம், குரோம் 4.6 சதவீதம், சபாரி 4.5சதவீதம், ஆப்பரா 2.4 சதவீதம், மற்றவை 1.2 சதவீதம்.

ஏசர் மொபைல் ஸ்மார்ட் போன்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே. இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது. புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS) தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன. 3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.


இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

Samsung B5722

இரண்டு சிம்களில் இயங்கும் டச் ஸ்கிரீன் வரிசையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung B5722 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போனில், சிம்கள் பயன்படுத்து வதன் நேரத்தினை, அவற்றின் கட்டணத்திற்கேற்ப வரையறை செய்து கொள்ளலாம். ஒரே டச் கீ மூலம் ஆறு விட்ஜெட்களை இயக்கும் திறன், ஆறு நெட்வொர்க் தரும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இந்த போனில் குறிப்பிடத்தக் கவையாகும். இதன் திரை 2.8 அகலத்தில் உள்ள தொடுதிரையாகும். இமேஜ் எடிட்டர் வசதியுடன் 3 எம்.பி. கேமரா, புளுடூத், ஹை ஸ்பீட் யு.எஸ்.பி., 8 ஜிபி வரை நீட்டிக்கும் வகையில் மெமரி, 13.4 மணி நேரம் பேசும் திறன் தரும் 1200 mAH பேட்டரி தரப்பட்டுள்ளன. இதன் எப்.எம். ரேடியோ ஒலி பரப்பினை மற்ற வேலைகளை இந்த போனில் மேற்கொள்கையில் பின்னணி இசையாகக் கேட்டு மகிழலாம். இதில் இரண்டு சிம்களையும் இணைத்து ஒரு நவீன மொபைல் ட்ரேக்கர் முதல் முதலாகத் தரப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 11,680.,,,,,,

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அழகியே படங்கள்


காதலர் தினம்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?


சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?

பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை



கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?



முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஓவியம் தீட்டலாம்….

எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ,


அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.



கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா

எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து

பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

இனிமேல் கவலையில்லை,

காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்….

இலவசமாக பேசிக்கொள்ள

உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இரு கணினிகள் – அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி ( voice chat) மூலம் எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே.
அந்த மாதிரியான குரல்வழி ( voice chat) இணைப்புக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருட்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச அழைப்புக்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணினி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணினி பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தொல்லைதானே !
இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கையடக்கத்தொலைப்பேசிகள் ( mobile phone’s) ஒரு குட்டி கணினி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது.

USA இல் இருந்து i-phone வழி Yahoo Messenger-ல் நுழைந்து லண்டனில் உள்ளவருக்கு N95 வழி Yahoo Messenger இன் மூலம் இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan meter தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி கட்டணத்தைல்ல.
அமெரிக்காவில் AT&T “unlimited” Data Plan-னை மாதம் குறைந்த கட்டணத்தில் தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்.
ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் ( iphone) வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB data மட்டுமே பரிமாற்றம் (transfer) ஆகியிருக்குமாம்.
இலங்கையில் Dialog, Mobital, Airtel,Tigo இணைப்புக்கள் 1KB க்கு 2 சதம் என்ற அடிப்படையில் கட்டணங்ளை அறவிடுகின்றன.
இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ளலாம் .மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல தொலைபேசி அட்டைகள் கோடிகோடியாய் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.
மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring. ( VoIP over 3G, GPRS and WiFi networks)

உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். http://www.fring.com/download/
fring ஆனது Skype®,Facebook, MSN® Messenger, ICQ®, Google Talk™, Twitter, AIM® , Yahoo!™, Last.fm போன்றவற்றை ஆதரிக்கிறது.

நீங்களும் இனி Skype தொலைபேசி உரையாடல்களை கையடக்கதொலைபேசியினுடாக ( mobile phone) செய்யலாம்.

இது peer-to-peer VoIP தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இப்பொழுது Twitter 2.0 க்கு இசைவாக நடக்கும் வகையில் ( new Twitter 2.0 Add-on for fring) இருக்கிறது.
டியுட்டரில் ( Twitter ) செய்திகள் வரும் போது ஒலியை தந்து ( ringing tone) நினைவூட்டுகிறது.
டியுட்டரில் ( Twitter ) செய்திகளை கையடக்க தொலைபேசி இரண்டு விதமாக கையாளுகிறது.
1. விண்டோஸ் மொபைலில் fring இல் உள்ள Add-ons பகுதிக்கு சென்று பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Windows Mobile- just go to the Add-ons tab inside fring, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on. )
2. Symbian மென்பொருளில் இயங்கும் கையடக்கதொலைபேசிகளில் ( e.g :Nokia, Sony Ericsson, Samsung) புதிய fring மென்பொருளை தரையிறக்கி ( download ) பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Symbian handset owner, simply download the new fring version 3.37 first, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on)
http://www.fring.com/download/  முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!

கிரிக்கெட் திருவிழா

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. http://www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.


கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.

இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

ஜிமெயிலில்

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.


கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி  http://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெற  http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் (டிஎணிணிஞ்டூஞு) வசதி. நீங்கள் டிஎணிணிஞ்டூஞு பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற  http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை  http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.

விண்டோஸ் வேகமாக

விண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.


1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.

ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.

இந்த இலவச புரோகிராமினை  http://www.pcworld.com/article/151952/boot_   faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.

2. குரோம் (Chrome) மாறலாமா?: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது? தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.

3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு
(‘Balanced’)
பெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.

4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.

5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது? அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்ட் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும்? அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா! இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.

1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.

2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக இடம் கிடைக்கும்.

இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.

கீப் பாஸ் (KeePass):

கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்:  http://keeppass.info/

சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த,

இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/

2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reade



3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im



4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்:  http://www.irfanview.com/
5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்:  http://www.mozilla.com/enUS/firefox/personal.html
6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்:  http://www.7zip.org/