செவ்வாய், 29 டிசம்பர், 2009

கம்பியூட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeatures என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.




டெல் தரும் புதிய ஹோம் பி.சி.
இன்ஸ்பிரான் ஒன் 19 (Inspiron One 19) என்ற பெயரில் அண்மையில் டெல் நிறுவனம் ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வீடுகளில், சிறிய அலுவலகங்களில், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் வைத்து இயக்க போதுமான பெர்சனல் கம்ப்யூட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கருப்பு வண்ணத்தில் பளபளக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.18.5 அங்குல டிஸ்பிளேயுடன் மானிட்டர், பெண்டியம் டூயல் கோர் அல்லது கோர் 2 டுயோ ப்ராசசர் (கிராபிக்ஸ் இணைந்து) , 4 ஜிபி டூயல் சேனல் டி.டி.ஆர். 2 மெமரி, 640 ஜிபி ஹார்ட் டிஸ்க், 16 எக்ஸ் டிவிடி ஆப்டிகல் டிரைவ், ஆடியோ 2 வாட் சைட் ஸ்பீக்கர்கள், 8டிண1 மீடியா கார்ட் ரீடர்,1.3 வெப் கேமரா, மைக், 6 யு.எஸ்.பி.போர்ட் ஹெட்போன் மற்றும் மைக் ஜாக், இரண்டு பி.எஸ்.2, பேரலல் மற்றும் சீரியல் போர்ட் ஆகிய, இன்று எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 29,900.

மெதுவாக இயங்கும் விண்டோஸ், வேகத்தில் இயங்க அனைத்து வகை வழிகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 20 டிப்ஸ்கள் தரப்பட்டன. மேலும் இருபது டிப்ஸ்கள் இந்த வாரம் தரப்படுகின்றன.
21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!
23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance"தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.
25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.
26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.
27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.
28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.
29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.
31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.
35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.
36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.
37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.
38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.
39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா? தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.
40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.

முன்பு ஒரு கம்ப்யூட்டர் மலரில், பிளாஷ் டிரைவ் குறித்து எழுதுகையில் கம்ப்யூட்டரைப் பராமரிக்க பல புரோகிராம்கள் வந்துள்ளன. இவற்றை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து எங்கும் எடுத்துச் சென்று, எந்தக் கம்ப்யூட்டர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். பல வாசகர்கள் தொடர்ந்து அது எப்படி சாத்தியம், அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கடிதங்கள் அனுப்பி உள்ளனர். ஊட்டி அருகே உள்ள வாசகர் ஒருவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடிக்கடி கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தன்னை அழைப்பதாகவும், அதற்கு இந்த பிளாஷ் டிரைவ் மிகவும் உதவியாக இருக்குமே என்று கேட்டு, வழிகளைக் கேட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ் டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அதனால் தான் இவற்றை பிளாஷ் டிரைவில் புரோகிராம்களாகவே பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. இவை பெரும்பாலும் தனி நபர் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத்தான் தீர்வுகளைத் தரும். அத்தகைய புரோகிராம்களை இங்கு காணலாம்.
1. சிகிளீனர் (Cleaner)சிகிளீனர் புரோகிராமி னைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற http://www.piriform.com /ccleaner/download/portableஎன்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளியேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.
2. ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller): இந்த புரோகிராம் குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ளது. இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து புரோகிராம்களை எளிதாக அன் இன்ஸ்டால் செய்திட முடியும். ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் நீக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அவற்றை அழகாக எடுத்தெறிகிறது. போர்ட்டபிள் பதிப்பு http://www.revouninstaller.com/ revouninstaller.zip என்ற முகவரியில் கிடைக்கிறது. அதனை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதியவும்.
3.ஈஸி கிளீனர் (Easy Cleaner)இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனையும் பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை http://personal.inet.fi/business /toniarts/ecleane.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
4. சூப்பர்ஆண்ட்டி ஸ்பைவேர் ஆன்லைன் சேப் ஸ்கேன் (Super Anti Spyware Online Safe Scan) : மால்வேர் எனப்படும் ஸ்பை வேலை மேற்கொள்ளும் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைப் பல மாதங்கள் தேடிய பின் இது இருப்பது தெரிந்தது. மிகச் சிறப்பாக இது வேலை செய்கிறது. டாஸ் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை இயக்கியவுடன் விண்டோ இன்டர்பேஸ் ஒன்று தந்து நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, ஸ்பை வேர்களைக் கண்டறிகிறது. இதன் சிறப்பு இந்த புரோகிராம் அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதுதான். இதனை http://www.superantispyware. com/onlinescan.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம்.
5. ஹைஜாக் திஸ் (HijackThis) : ட்ரென்ட் மைக்ரோ நிறுவனம் தரும் புரோகிராம். இது எந்த மால்வேர் புரோகிராமினையும் பிக்ஸ் செய்வதில்லை. ஆனால் கண்டவுடன் நமக்கு ஒரு ரிப்போர்ட் தருகிறது. இதனை நாம் படித்து அறிந்து கொள்ள முடியாது. அப்படியே இந்த தளம் தரும் ஆன்லைன் அமைப்புகளில் பேஸ்ட் செய்தால், மால்வேர்களை நீக்கும் வழிகள் கிடைக்கும். http://hjtdata.trendmicro.com/hjt/analyzethis/index.php
என்ற தளத்தில் இது கிடைக்கிறது.
6. ரெகுவா Recuva) ): இந்த புரோகிராம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. இதன் போர்ட்டபிள் புரோகிராம் http://www.piriform. com/recuva/download/portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இது பிளாஷ் டிரைவில் இருப்பது மிக அவசியம். அறியாமல் அழித்த பைல்களை நீக்கும் பணியை இதன் மூலம் அழகாக மேற்கொள்ளலாம். சிகிளீனர் தயாரித்து வழங்கும் நிறுவனமே இதனையும் தயாரித்து வழங்குகிறது.



விண்டோஸ் எக்ஸ்பி ரிப்போர்ட



விண்டோஸ் எக்ஸ்பியில் ஏதேனும் ஒரு புரோகிராம் கிராஷ் ஆனால், உடனே இது போல இந்த புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. அதற்கான ரிப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா? என்ற செய்தியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். யெஸ் என்ற பட்டனை அழுத்தினால்,உடனே அறிக்கை தயாரிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் அனுப்பப்படும். இந்த ரிப்போர்ட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்திட டேட்டா கிடைக்கிறது. எந்த சூழ்நிலையில் அந்த புரோகிராம் கிராஷ் ஆனது; அதற்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று ஆய்வு செய்திட முடிகிறது. ஆனால் சிலர் நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணி பெரும்பாலும் ரிப்போர்ட் அனுப்ப வேண்டாம் என்ற பட்டனையே அழுத்துகின்றனர். இதற்குக் காரணம், புரோகிராம் கிராஷ் ஆகிப் பிரச்னையில் இருக்கும் நமக்கு இதுவும் ஒரு தொல்லை என்று எண்ணுகின்றனர். அடுத்தபடியாக பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், எந்நேரமும் இன்டர்நெட் இணைப்பில் இருப்பதில்லை. எனவே ரிப்போர்ட் தயார் செய்தாலும் பலன் இல்லை. இதன் பின் இணைப்பு ஏற்படுத்தினால், ரிப்போர்ட் செல்லப்போவது இல்லை. எனவே இது போன்ற ரிப்போர்ட் தயாரிக்கும் வசதியை முடக்கினால் என்ன என்று எண்ணுகின்றனர். அவர்களுக்கான செட்டிங்ஸ் இதோ:




1. Control Panel ஐத் திறக்கவும்.
2. Preformance and Maintenance என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின் System என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
4. இதற்குப் பிறகு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Advanced என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இந்த விண்டோவின் கீழாக Error Reporting என்ற பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.
6. இதில் Disable error reporting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனிமேல் எந்த புரோகிராம் கிராஷ் ஆனாலும் எர்ரர் ரிப்போர்ட்டிங் அறிக்கை தயாரிக்கவா என்ற செய்தி கிடைக்காது.
7,-------------
கேள்வி: டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பைல் விபரங்களுடன் ஒரு விண்டோ காட்டப்படுகிறது. அதில் ரன் என்றும் சேவ் என்றும் இரண்டு ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
–ஆர். ப்ரியா ராணி, புதுச்சேரி
பதில்: இணையத்திலிருந்து பைல் ஒன்றை டவுண்லோட் செய்திடுகையில் மற்றும் என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். இரண்டுமே புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் செட் அப் செய்வதற்கான வழிகள்தான். ஒன்று உடனே இன்ஸ்டால் செய்திடும் வேலையை மேற்கொள்ளும். இன்னொன்று பின்னொரு நேரத்தில் இன்ஸ்டால் செய்திட, அதன் பைலை கம்ப்யூட்டரில் நீங்கள் காட்டும் இடத்தில் சேவ் செய்து வைக்கும். சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதற்கான பைல் கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். ரன் (Run) என்பதைக் கிளிக் செய்தால், அந்த புரோகிராமினை செட் அப் செய்திடும் பணி மேற்கொள்ளப்படும். பொதுவாகப் பலரும் பைலை கம்ப்யூட்டரில் சேவ் செய்து, பின் இயக்கி இன்ஸ்டால் செய்வதனையே விரும்புவார்கள். இதனை காப்பி செய்து மற்றவர்களுக்கு வழங்கலாம்; நமக்கும் தேவைப்படும் போது இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
8,---------------

கருத்துகள் இல்லை: