வியாழன், 17 டிசம்பர், 2009

நீயும் நானும்

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

திணை : குறிஞ்சி-பாடல் :
குறுந்தொகை:40.விளக்கம்:
என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையோர்? நானும் நீயும் எக்குடிவழியைச் சார்ந்தவராக அறிதல் கூடும்?செம்மண்
நிலத்தில் பெய்யும் மழைநீரைப் போல,நம்முடைய நெஞ்சங்கள் தாமாக அன்புடன் கலந்தன.

மழைநீருக்கு என்று எந்த நிறமும் சுவையும் இல்லை.ஆனால்,செம்மண் நிலத்தில் பெய்தபின்
ஒன்றுபடுவது போல,இருவர் உள்ளங்களும் தம்முள் கலந்து ஒன்றாயின.நீ யாரோ?நான் யாரோ? ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிதான் அழகி அழகி .அன்பு உன்னை அழ காக்கும்

1 கருத்து:

ஜெய் சொன்னது…

நன்றி நண்பரே மனித கண்டு பிடிப்பு ஆபத்து தான் அதிகம் உள்ளவைகள்