திங்கள், 15 பிப்ரவரி, 2010

PDFPortable Document Format பி.டி.எப்.

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from  http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word from   http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

3. பி.டி.எப். கிராக் (PDFCrack): நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம்.  http://www.ensode.net/pdfcrack.jsf என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.

4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline): எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்ற  http://www.pdftoexcelonline.com/ என்ற முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.

5. பி.டி. பைண்ட் (PD Find): கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த (http://pdfind.com)தளத்தில் தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.

6. பி.டி.எப். வியூ (PDFVue): அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது.  http://www.pdfvue.com/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.

7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter): எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும். செல்ல வேண்டிய தளம்  http://htmlpdfconverter.com/

8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF): எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.mergepdf.net. ஒவ்வொரு பைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.

9.கவுண்ட் ஆன் இட் (Count On It): பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம்.  http://felixcat.com/tools/wordcount/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி கிடைக்கிறது. PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.

10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF): இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும். செல்ல வேண்டிய தள முகவரி  http://www.brothersoft.com/ speedypdf30012.html

M S ஆபீஸ் 2010

வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.


ஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)

ஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.

ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.

ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் கிரா

இது அடிக்கடி நாம் கேட்கும் ஒரு சொல் தொடர். அது என்ன கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது? உங்கள் மீது மோதி நின்னு போச்சா! என்று சிலர் கேலி செய்வார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது என்பது வேறு ஒன்றைக் குறிப்பிட்டாலும், நாம் எதிலாவது மோதி நின்றால், கவலைப்படுவதனைக் காட்டிலும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் கவலைப்படுவோம். இல்லையா

அடிப்படையில் கம்ப்யூட்டர் கிராஷ் என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது உங்கள் சிஸ்டம் புரோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் போவதுதான். இதனால் மற்ற புரோகிராம் அல்லது கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுகளும் முடங்கிப் போவதுதான். குறிப்பாக கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய பகுதி இயங்காமல் முடங்குவது, கம்ப்யூட்டரின் செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடும். எது காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராஷ் என்பது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் கிராஷ் என்பதனை சிலர் சிஸ்டம் கிராஷ் என்றும் கூறுவார்கள்.

இன்டர்நெட் புள்ளி விபரங்கள் 2009

2009ல் இணையம்


நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் அனுப்பப்பட்ட இமெயில்கள் – 90 ட்ரில்லியன். நாளொன்றுக்கு சராசரியாக 24.7 கோடி இமெயில்கள் அனுப்பப்பட்டன. உலக அளவில் 140 கோடி பேர் இமெயில்களைப் பயன்படுத்தினர். இந்த ஆண்டில் புதிதாய் இமெயில் அனுப்பி யவர்கள் 10 கோடி. மொத்த இமெயில்களில் குப்பையாக மொத்தமாக அனுப்பப்பட்டவை 81சதவீதம். ஆண்டின் இறுதியில் இந்த ஸ்பேம் மெயில்கள் 92 சதவீதம் வரை உயர்ந்தன. சென்ற ஆண்டு மட்டும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருந்தது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ஸ்பேம் மெயில்கள் அனுப்பப்பட்டன. டிசம்பர் இறுதியில் மொத்தம் 23.40 கோடி இணையதளங்கள் இருந்தன. இவற்றில் 4.7 கோடி இணையதளங்கள், 2009ல் உருவாக்கப்பட்டவை. மொத்த தளங்களில் .COM என்ற வகை தளங்கள் 8.18 கோடி, .NET என்ற பெயரில் 1.23 கோடி, .ORG என்ற வகையில் 78 லட்சம், .IN போன்ற நாட்டின் துணைப் பெயர்களில் 7,63 கோடி இருந்தன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 18% உயர்ந்திருந்தது. ஆசியா – 73,82,57,230, ஐரோப்பா – 41,80,29,796, அமெரிக்கா 25,29,08,000, கரிபியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் – 17,90,31,479, ஆப்பிரிக்கா – 6,73,71,700, மத்திய கிழக்கு நாடுகள் – 5,74,25,046, ஆஸ்திரேலியா, ஓசியானியா நாடுகள் – 2,09,70,490. பிளாக்குகள் எனப்படும் சிறிய வலை மனைகளின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் 12.6 கோடி. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வலைமனை 84 சதவீதம் கூடுதலாகும். பேஸ்புக் தளத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை 35 கோடி. இவர்களில் 50சதவீதம் பேர் நாள்தோறும் இதனைப் பயன்படுத்தினர். 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்து பவர்களாக இருந்தனர். 2009 டிசம்பரில் பிரவுசர் பயன்பாடு கீழ்க்குறித் தபடி இருந்தது. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் – 62.7சதவீதம், பயர் பாக்ஸ் 24.6 சதவீதம், குரோம் 4.6 சதவீதம், சபாரி 4.5சதவீதம், ஆப்பரா 2.4 சதவீதம், மற்றவை 1.2 சதவீதம்.

ஏசர் மொபைல் ஸ்மார்ட் போன்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே. இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது. புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS) தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன. 3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.


இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

Samsung B5722

இரண்டு சிம்களில் இயங்கும் டச் ஸ்கிரீன் வரிசையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung B5722 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போனில், சிம்கள் பயன்படுத்து வதன் நேரத்தினை, அவற்றின் கட்டணத்திற்கேற்ப வரையறை செய்து கொள்ளலாம். ஒரே டச் கீ மூலம் ஆறு விட்ஜெட்களை இயக்கும் திறன், ஆறு நெட்வொர்க் தரும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இந்த போனில் குறிப்பிடத்தக் கவையாகும். இதன் திரை 2.8 அகலத்தில் உள்ள தொடுதிரையாகும். இமேஜ் எடிட்டர் வசதியுடன் 3 எம்.பி. கேமரா, புளுடூத், ஹை ஸ்பீட் யு.எஸ்.பி., 8 ஜிபி வரை நீட்டிக்கும் வகையில் மெமரி, 13.4 மணி நேரம் பேசும் திறன் தரும் 1200 mAH பேட்டரி தரப்பட்டுள்ளன. இதன் எப்.எம். ரேடியோ ஒலி பரப்பினை மற்ற வேலைகளை இந்த போனில் மேற்கொள்கையில் பின்னணி இசையாகக் கேட்டு மகிழலாம். இதில் இரண்டு சிம்களையும் இணைத்து ஒரு நவீன மொபைல் ட்ரேக்கர் முதல் முதலாகத் தரப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 11,680.,,,,,,

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அழகியே படங்கள்


காதலர் தினம்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?


சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?

பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை



கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?



முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை