திங்கள், 8 பிப்ரவரி, 2010

கிரிக்கெட் திருவிழா

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. http://www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.


கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.

இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

கருத்துகள் இல்லை: